Apr 21, 2014

யுகங்கள்

கிருதயுகம் , திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம். 

இந்த நான்கு யுகமும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.

1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14  மன்வந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14  மன்வந்திரங்கள்
1 பிரம்மா காலம் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்)

இதன் பின் பிரம்மாவின் காலம் சுழலும்.

யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.

1 யுகம் = 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் = 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் = 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் = 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)

பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.

கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டது சதுர்யுகம்.
சதுர்யுகம் = கிருதயுகம் + த்ரேதாயுகம் + துவாபரயுகம் + கலியுகம் = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள்.


1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14  மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14  மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்) = 28 மனுவந்தரங்கள்

இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார். அது மட்டுமின்றி 4 வகையான யுகங்கள் பார்த்தோமில்லையா. அது ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுட்காலம் வேறுபடும். உதாரணத்துக்கு கலியுகத்தின் ஆரம்பத்தில் மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் தான். ஆனால் மற்ற யுகங்களில் எவ்வளவு எனத்தெரியுமா ?

கிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்
த்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்
கலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்

கலியுகம் முடியும் சமயத்தில் மனித இனத்தின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வந்து 20 ஆண்டுகள் வரைக்கும் செல்லும். அதற்குப் பிறகு உலகம் அழிந்து மீண்டும் கிருதயுகம் பிறக்கும். அதேபோல நற்குணங்களும், பாவங்களும் ஒவ்வொரு யுகத்திலும் வேறுபடும். கிருதயுகத்தில் எந்த பாவமும் இருக்காது. முழுக்க முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம் கிருதயுகம். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் யுகம் அதுதான். அதேபோல மற்ற யுகங்களில்,


கிருத யுகம் = பாவமே இருக்காது. முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம்.
த்ரேதா யுகம் = 1 பங்கு பாவம் + 3 பங்கு நற்குணங்கள்
துவாபர யுகம் = 2 பங்கு பாவம் + 2 பங்கு நற்குணங்கள்
கலியுகம் =  1 பங்குதான் நற்குணம் இருக்கும். மீதி முழுக்க பாவம் நிறைந்த யுகம்.

இப்படி இந்த சுழற்சியில், இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் ஆரம்பித்து 5000 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியே ஆண்டுகள் கடக்க கடக்க, உலகத்தில் பழி, பாவங்கள் அதிகரிக்குமாம். நல்ல விஷயங்கள் எங்குமே நடக்காது. போட்டி, பொறாமை அதிகரித்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒழுக்கமற்ற நிலைமை ஏற்பட்டு உலகமே அழிவுப்பாதையில் இறங்கும். ஆட்சியாளர்கள் மக்களின் செல்வத்தைத் திருடுவார்கள். அவர்களைக் காத்திட மாட்டார்கள். மக்கள் அகதிகளாக நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கல்வியறிவு மதிக்கப்பட மாட்டாது. மக்கள் தவறான கருத்துக்களையே ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். பொறாமை எங்கும் நிறைந்திருக்கும். மழை பெய்யாது. நீர் கிடைக்காது. பசி, பஞ்சம் தலை விரித்தாடும். பிச்சைக்காரர்களும், வேலையற்றோரும் நிறைந்திருப்பர். பணம் நிறைய முக்கியத்துவம்  பெறும். இளம்பெண்கள் கற்பை விலைபேசுவர். சிசுக்கள் வயிற்றிலிருக்கும் போதே கொல்லப்படும். உலகம் அழியும். (இதில் அனைத்துமே இப்போதே நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களுக்குள்ளேயே இவ்வளவு நடக்கிறதென்றால், போகப்போக என்னாகுமோ ?)

0 comments:

Post a Comment